கோதாவரி ஆற்றில் 80 பேரை கதிகலங்கவைத்த தீ விபத்து!

ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் சுற்றுலா சென்ற பயணிகளின் படகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

தீ விபத்து

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் 80 பயணிகளுடன் சென்ற சுற்றுலா படகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. படகில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதி போலீஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும், அந்தப் படகில் பயணித்தவர்கள் அனைவரும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள். இவர்களை, அரசு விதிகளை மீறி அதிகளவில் சுற்றுலாப் படகில் ஏற்றிக்கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கோதாவரி ஆற்றில் சட்டவிரோதமாகப் படகுப் பயணம் செய்வதும் ஆண்டுக்கு ஒரு முறை அங்கு விபத்து ஏற்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!