`இனி நீட் தேர்வு எழுத முடியாது’ - 25 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு செக் வைத்த உயர் நீதிமன்றம்

நீட் தேர்வை 25 வயதைக் கடந்த மாணவர்கள் எழுத முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வாக இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை, மத்திய அரசு அமைப்பான சி.பி.எஸ்.இ நடத்திவருகிறது. நீட் தேர்வு எழுதுவதற்கு பொதுப் பிரிவினருக்கு குறைந்தபட்ச வயது 17 ஆகவும் அதிகபட்ச வயதாக 25 ஆகவும் நிர்ணயித்துள்ளது. மேலும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு குறைந்த பட்ச வயது 17 ஆகவும் அதிகபட்ச வயதாக 30 நிர்ணயித்து அறிவிப்பை வெளியிட்டது.

அதை எதிர்த்து வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 25 வயதைக் கடந்த 10 மாணவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், `எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளில் சேர்வதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் வயது வரம்பு இல்லை. ஆனால், நீட் தேர்வுக்கு மட்டும் வயது வரம்பு உள்ளது' என்று வழக்கு தொடர்ந்தனர். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், `நீட் தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது பொதுப் பிரிவினருக்கு 25 மற்றும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 30 என்ற சி.பி.எஸ்.இ அறிவிப்பை உறுதி செய்து உத்தரவிட்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!