Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கர்நாடக தேர்தல் போர் - வாக்குப் பதிவு தொடங்கியது

கர்நாடகா தேர்தல்

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலின் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதால் மாலை ஆறு மணி வரையிலும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை தவிர மற்ற 222 தொகுதிக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள ஜெயநகர் தொகுதியின் பாஜக வேட்பாளர் திடீரென உயிரிழந்தார், மற்றும் ராஜராஜேஸ்வரி நகரில் போலி வாக்காளர் அடையாள அட்டைச் சிக்கியது. இதனால் இந்த இரண்டு தொகுதிகளில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் சுமார் 2622 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அங்கு மிகப் பெரிய கட்சிகளாக உள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த கர்நாடக தேர்தல் ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. எனவே இந்த இரு கட்சிகளும் தங்களின் பலத்தை நிரூபிக்க கடுமையாகப் போராடி வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மற்ற கட்சிகளான, இந்திய குடியரசு கட்சி, ஆம் ஆத்மி, மஜத ஆகியன  கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலே பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். கடந்த ஜனவரி மாதம் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அதன் பின் பாஜக தலைவர் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மே மாதம் தொடங்கியதில் இருந்து அங்குப் பிரச்சாரம் மிகவும் சூடு பிடிக்கத் தொடங்கியது. பிரதமர் மோடி அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். இரண்டு வருடங்களாக எந்தப் பிரச்சாரத்திலும் ஈடுபடாமல் இருந்த காங்கிரஸின் சோனியா காந்தி, கர்நாடக தேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்தார். பலத்த வார்த்தை போர், இரு கட்சியினரின் குழப்பப் பேச்சுகள், இரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகளின் தவறை சுட்டிக்காட்டுவது எனச் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து முடிந்தது தேர்தல் பிரச்சாரம்.

இன்று தொடங்கிய வாக்குப் பதிவில் 5 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 538 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 58,302 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடியைச் சுற்றி 500 மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 1.4 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைத் தவிர மத்திய ரிசர்வ் படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 12 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு மட்டும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் மே 15-ம் தேதி எண்ணப்படுகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement