வெளியிடப்பட்ட நேரம்: 09:06 (12/05/2018)

கடைசி தொடர்பு:10:37 (12/05/2018)

முதல் ஆளாக வாக்களித்த பாஜக முதல்வர் வேட்பாளர்

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா முதல் ஆளாக இன்று காலையிலேயே வாக்குப்பதிவு செய்தார்.

எடியுரப்பா

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. அம்மாநிலத்தின் பாஜக முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள எடியூரப்பா, இன்று காலையிலேயே ஷிகர்பூரில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். அங்கிருந்து நேரடியாக ஷிகர்பூரில் உள்ள, ஷிமோகா வாக்குச்சாவடிக்குச் சென்ற அவர் தனது வாக்கை முதல் ஆளாகப் பதிவு செய்தார். 

இவர் ஷிகர்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பின் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, ``கர்நாடக மக்கள், காங்கிரஸ் மற்றும் சித்தராமையா ஆட்சி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். குறைந்தது 150 இடங்களில் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. வரும் மே 17-ம் தேதி கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்பேன். கர்நாடக மக்களுக்கு நான் நல்ல ஆட்சியைக் கொடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.” இவ்வாறு கூறினார்.