வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (12/05/2018)

கடைசி தொடர்பு:15:50 (12/05/2018)

சட்ட விரோத குடிநீர் இணைப்புக்கு மோதிக் கொண்ட மக்கள்! - மகாராஷ்டிராவில் வெடித்த கலவரம்

மகாராஷ்டிராவில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில் வாகனங்கள், கடைகள் எரிக்கப்பட்டுள்ளன.

மகாரஸ்ட்ரா

மகாராஷ்டிரா, அவுரங்கபாத்தில் சட்ட விரோதமாகக் குடிநீர் இணைப்புப் பெறுவதில் இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் உச்சமாக நேற்று இரவு அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர். இதனால் அங்கிருந்த கடைகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கித் தீ வைத்துள்ளனர். மேலும், இந்தக் கலவரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கலைத்தனர். அங்குத் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்துக்குக் காரணமான 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தக் கலவரத்தில் காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.