பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: மத்திய அரசின் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

பாலியல் வன்கொடுமை மற்றும் அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் மத்திய அரசின் புதிய திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

rape victim

நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தால் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் வகையில் போக்ஸோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். 

அதேபோல், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் புதிய திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது. தேசியச் சட்டச் சேவைகள் ஆணையத்தால் இத்திட்டம் முன்மொழியப்பட்டது. இத்திட்டத்தின்படி பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் முதல் அதிகப்பட்சம் ரூ.7 லட்சம் வரையிலும் இழப்பீடு கோரலாம். கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையில் இழப்பீடு வழங்கப்படும். அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குறைந்தப்பட்சம் ரூ.7 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.8 லட்சம் வரையில் இழப்பீடு வழக்கப்படும். நாடு முழுவதும் இந்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, இதுதொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கவும் ஆணையிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!