Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கர்நாடகத்தில் ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார்? தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக் கணிப்பு முடிவுகள்!

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் நாடு முழுக்க பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆளுங்கட்சியான பி.ஜே.பி, வடமாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று தனது செல்வாக்கை நிலைநாட்டி வருகிறது. இந்நிலையில், தென் மாநிலமான கர்நாடக சட்டசபைத் தேர்தலிலும் தனது வெற்றிக் கணக்கைத் தொடக்கத் திட்டமிட்டு கடுமையாகத் தேர்தல் வேலைகளைச் செய்துவருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில், ஒட்டுமொத்தமாக 70 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. 

வட மாநிலங்களிலிருந்து தென் மாநிலங்கள் எப்போது மாறுபட்டு நிற்பவை. அந்தவகையில், பி.ஜே.பி-யின் அரசியல் வியூகம், தென்மாநிலமான கர்நாடகாவில் எடுபடுமா... என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதேசமயம், இம்மாநிலத்தின் தற்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளுமா  என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

இந்நிலையில், இன்று நடந்துமுடிந்துள்ள இந்தத் தேர்தலுக்குப் பிந்தைய சூழ்நிலையில் மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்றக் கருத்துக்கணிப்புகளை ஊடகம் வெளியிட்டுள்ளன. அந்தக் கருத்துக்கணிப்புகளின்படி கர்நாடகாவில் அடுத்து ஆட்சி அமைக்கப் போகிறவர் யார் என்ற விவரங்களைக் கீழே பார்க்கலாம்...

டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கணிப்பின்படி காங்கிரஸுக்கு 90 முதல் 103 இடங்களும் பி.ஜே.பி-க்கு 80 முதல் 93 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 31 முதல் 39 இடங்களும் கிடைக்கலாம் எனத் தெரியவருகிறது.  நியூஸ் எக்ஸ் - கணிப்பு, காங்கிரஸுக்கு 72 முதல் 78 இடங்கள் என்றும், பி.ஜே.பி-க்கு 102 முதல் 110 இடங்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியா டுடேயின் கருத்துக்கணிப்புபடி, காங்கிரஸுக்கு 106 முதல் 118 இடங்களும், பி.ஜே.பி-க்கு 79 முதல் 92 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. சுவர்னா நியூஸ் கணிப்பு, காங்கிரஸுக்கு 106 முதல் 108 இடங்கள், பி.ஜே.பி-க்கு 79 முதல் 92 இடங்கள், மதசார்பற்ற ஜனதாதளம் 22 முதல் 30 இடங்கள் பிடிக்கலாம் எனச் சொல்கிறது. ஆக்சிஸ் நிறுவனத்தின் கணிப்புப்படி, காங்கிரஸ் 106 முதல் 118 இடங்களும், பி.ஜே.பி 79 முதல் 92 இடங்களும், மதசார்பற்ற ஜனதாதளம் 22 முதல் 30 இடங்களும் பிடிக்கலாம் எனத் தெரிகிறது. 
என்.டி.டி.வி-யின் கருத்துக்கணிப்பு, காங்கிரஸுக்கு 86 இடங்களும், பி.ஜே.பி-க்கு 100 இடங்களும், மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு 33 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகிறது.  இதனால் தொங்கு சட்டசபை ஏற்படும் என தெரிகிறது. ஆட்சி அமைப்பதில்  மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு முக்கிய பங்கு இருக்கும் எனவும் தெரிய வருகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement