வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (13/05/2018)

கடைசி தொடர்பு:09:00 (13/05/2018)

''ராமாயணக் காலத்திலேயே தொழில்நுட்பத்தில் மேலோங்கிய ஆயுதங்கள் இருந்தன'' - பஞ்சாப் ஆளுநர் பேச்சு

பஞ்சாப் ஆளுநர்

இன்றைய நவீன யுகத்தில், விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் நாம் பயன்படுத்தி வரும் அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளன. ஆனால், இந்தக் கண்டுபிடிப்புகள் எல்லாம் பண்டைய இந்தியாவிலேயே இருந்தவைதான் என்று மத நம்பிக்கையாளர்கள் புராணங்களிலிருந்தும் மதம் சம்பந்தப்பட்ட நூல்களிலிருந்தும் மேற்கோள் காட்டிப் பேசிவருகின்றனர். பிளாஸ்டிக் சர்ஜரி, இன்டர்நெட், ஆகாய விமானம்... என இன்றைய நவீனங்கள் எல்லாம் புராண காலத்திலேயே இருந்ததாக பி.ஜே.பி தலைவர்கள் சமீபகாலமாகப் பேசிவருகிறார்கள். இந்த வரிசையில், பஞ்சாப் மாநில ஆளுநரான வி.பி.சிங் பட்னோரும் தற்போது இணைந்துள்ளார். 

தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு, மொகாலியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசியவர், ''ராமாயணக் காலத்திலேயே இந்தியா தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்திருந்ததற்கான அடையாளம் தான் சேது ராமர் பாலம்.  இதேபோல், சஞ்சீவி மலையை அனுமன் தூக்கிக் கொண்டு வந்ததும் கூட அந்தக் காலத்திலேயே நாம் எந்தளவு தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னோக்கியிருந்தோம் என்பதையே காட்டுகிறது. இதுமட்டுமல்ல, அந்தப் புராண இதிகாச காலத்திலேயே அதி நவீன ஆயுதங்களும் கூட இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளன'' என்றிருக்கிறார். பஞ்சாப் மாநில ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சங்கள் எழுந்துள்ளது.