பெண்களைக் கவர்ந்த ‘சஹி’ வாக்குச்சாவடி - கர்நாடக தேர்தலில் ருசிகரம்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதில் 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. 

கர்நாடகா தேர்தல்

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலின் வாக்குப் பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை தவிர மற்ற 222 தொகுதிக்கும் நடந்த தேர்தலில் மொத்தம் 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. மிகுந்த விறுவிறுப்புடன் நடந்து முடிந்தது கர்நாடக தேர்தல்.

நேற்று நடைபெற்ற இந்தத் தேர்தலில் முதல் முறையாக ஒரு சுவாரஸ்யமான விசயத்தைச் செய்துள்ளனர் அம்மாநில தேர்தல் அதிகாரிகள். ‘சஹி’ என்று பெயரிடப்பட்டு பெண்களுக்கு எனத் தனியாக வாக்குச் சாவடிகளை மாநிலம் முழுவதும் அமைத்திருந்தனர். அந்த வாக்குச் சாவடி முழுவதும் பிங்க் நிறத்தில் சூழ்ந்திருந்தது.

மேலும் அங்கு பெண் அதிகாரிகள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் பிங்க் நிறத்தில் உடையணிந்திருந்தனர். வண்ண பலூன்கள் அழகிய கோலங்கள் எனத் பெண்களுக்கென முற்றிலும் வித்தியான முறையை ஏற்படுத்தியுள்ளனர் அம்மாநில தேர்தல் அதிகாரிகள். இது அங்குள்ள பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!