வெளியிடப்பட்ட நேரம்: 18:12 (16/05/2018)

கடைசி தொடர்பு:18:12 (16/05/2018)

அரசியல் இழுபறி, வங்கிகளின் பலவீனமான அறிக்கைகளால் சந்தையில் தொய்வு  

பலவீனமான தொடக்கத்திற்குப் பின் மெதுவாகச் சுதாரித்து நஷ்டங்களைக் கணிசமாகக் குறைத்தபின், மற்றுமொரு வீழ்ச்சியைச் சந்தித்து இறுதியில் பலவீனமான முடிவையே இன்று கண்டது இந்தியப் பங்குச்சந்தை.

மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 156.06 புள்ளிகள் அதாவது 0.44 சதவிகிதம் சரிந்து 35,387.88 என முடிந்தது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்ட்டி 60.75 புள்ளிகள் அதாவது 0.56 சதவிகிதம் நஷ்டத்துடன் 10,741.10-ல் முடிந்தது.

சந்தையின் இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்களாக இருந்தவை :

1. சில பலவீனமான காலாண்டு அறிக்கைகள் மற்றும் ப்ராஃபிட் டேக்கிங் காரணமாக நேற்று அமெரிக்கச் சந்தை சரிந்தது.

2. வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே நடக்கவிருந்த பேச்சு வார்த்தை, அமெரிக்க - தென் கொரியா நாடுகளின் ஜாயின்ட் மிலிட்டரி எக்சர்ஸைசின் காரணமாக கான்செல் செய்யப்பட்டதையடுத்து கொரிய தீபகற்ப பகுதியில் நிலவும் டென்ஷன் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் இன்று பெரும்பாலும் தொய்வுடன் இருந்தன.

3. கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின் அங்கு எந்தக் கட்சி ஆட்சி அமைக்கப்போகிறது என்பது பற்றி நிலவும் இழுபறி நிலைமை இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாகச் சந்தை தொய்வுடன் இருந்ததற்கு ஒரு காரணம் எனக் கூறலாம்.

4. பஞ்சாப் நேஷனல் வங்கியின் காலாண்டு செயல்பாடு குறித்த அறிக்கையில், அவ்வங்கி அடைந்திருக்கும் பெரும் நஷ்டம் குறித்தும் வாராக் கடன்கள் பெருமளவு அதிகரித்திருப்பதும் இன்று அவ்வங்கியின் பங்குகளை மட்டுமன்றி தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளின் பங்குகளையும் வெகுவாகப் பாதித்தது. 

5. இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கெதிராக 16 மாதத்திய லோ -வை எட்டியதும் ஒரு காரணம். இருப்பினும், அது பின்னர் சுதாரித்து நேற்றைய முடிவு நிலையை விட உயர்ந்தது, பங்குச் சந்தையின் நஷ்டம் இன்னமும் பெரிதாக இல்லாமல் இருக்க உதவியது எனலாம்.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

ஹிந்துஸ்தான் யூனிலீவர் 3.9%
லூப்பின் 2.3%
ஐ.டி.சி  1.6%
பஜாஜ் ஆட்டோ 1.5%
விப்ரோ 1.4%
ஏசியன் பெயின்ட்ஸ் 1.2%
யெஸ் பேங்க் 1.1%
ஜீ டெலி 1%


விலை இறங்கிய பங்குகள் :

பஞ்சாப் நேஷனல் பேங்க் 12%
பேங்க் ஆஃப் பரோடா 5.5% 
ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் 3.7%
ஸ்டேட் பேங்க் 2%
சிப்லா 3.4%
அல்ட்ரா டெக் 3.1%
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.5%
கெயில் இந்தியா 2.4%
பாரத் பெட்ரோலியம் 2.2%
ஹின்டால்க்கோ 2%
ஹீரோ மோட்டோகார்ப் 1.9%
ஓ.என்.ஜி.சி 1.9%

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1016 பங்குகள் லாபத்துடனும், 1606 பங்குகள் நஷ்டத்துடனும் முடிவடைந்தன. 135 பங்குகள் சென்ற தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமல் முடிந்தன.