Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

சர்ச்சைகளுக்கு மத்தியில் கர்நாடகாவின் 23 வது முதல்வராகப் பதவியேற்றார் எடியூரப்பா..!

கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக, பா.ஜ.க-வைச் சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

எடியூரப்பா

கர்நாடக மாநிலத் தேர்தல் முடிவில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காதநிலையில், அதிகபட்சமாக 104 எம்.எல்.ஏ-க்களைப் பெற்ற பா.ஜ.க-வை ஆட்சியமைக்க அழைத்தார், கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா. அதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில், 'எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்பதற்குத் தடைவிதிக்க முடியாது' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். அவருக்கு, ஆளுநர் வாஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 3-வது முறையாக அவர் முதல்வராக பதவியேற்கிறார். ஏற்கெனவே, 2007-ல் குமாரசாமியுடன் கூட்டணி அமைத்து முதல்வராகப் பதவியேற்றார். பின்னர், மீண்டும் 2008-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வரானார். அவருடன் சேர்ந்து அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement