இவர்தான், எடியூரப்பாவுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றிய நீதிபதி! | supreme court sixth seniority judge heard Yeddyurappa case

வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (18/05/2018)

கடைசி தொடர்பு:13:51 (18/05/2018)

இவர்தான், எடியூரப்பாவுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றிய நீதிபதி!

எடியூரப்பாவுக்கு அதிர்ச்சி அளித்த மூவர் கொண்ட அமர்வு

இவர்தான், எடியூரப்பாவுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றிய நீதிபதி!

ர்நாடகத்தில், நாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 6 வது சீனியர் நீதிபதியான ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரித்தது. எஸ்.ஏ.போப்டே, அசோக்பூசன் ஆகியோர் இந்த அமர்வில் இடம் பெற்றிருந்த பிற நீதிபதிகள். 

எடியூரப்பாவுக்கு எதிராக சாட்டையை விளாசிய நீதிபதி சிக்ரி

ஏ.கே.சிக்ரி, 2013-ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியானார். முன்னதாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார். உச்ச நீதிமன்றத்தில் 12 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணிபுரிந்த அனுபவமும் இவருக்கு உண்டு. நாக்பூரைச் சேர்ந்த போப்டே, பம்பாய் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றினார். மத்தியப்பிரதேச மாநிலத் தலைமை நீதிபதியாக இருந்தார். இவரும் 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியானவர்தான். 

கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அசோக்பூசன், 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியானார். முன்னதாக, 2001-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். 

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராமீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அடுத்த சீனியர் நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகய், எம்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் ஜனவரி 12-ம் தேதி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது குற்றச்சாட்டுகள் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியதால், 6-வது சீனியரான ஏ.கே.சிக்ரி வசம் சென்சிட்டிவ்வான எடியூரப்பாவுக்கு எதிரான இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. 

கர்நாடகத்தில் நேற்று முதல்வராகப் பதவியேற்ற எடியூரப்பாவுக்கு, பெரும்பான்மையை நிரூபிக்க அந்த மாநில ஆளுநர் வஜுபாய் வாலா
15 நாள் அவகாசம் அளித்திருந்தார்.,

நீங்க எப்படி பீல் பண்றீங்க