`ஹேப்பி பர்த்டே பூஜா’ - இணையத்தை முடக்கி வாழ்த்துக் கூறிய ஹேக்கர்

டெல்லியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டு, அதில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இணையதளம்

டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா என்ற பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளம், நேற்று நள்ளிரவில் முடக்கப்பட்டது. முடங்கிய இணையத்தளத்தில், ‘ஹேப்பி பர்த்டே பூஜா. யுவர் லவ்’என்று எழுதப்பட்டிருந்தது. இதற்கு எந்தத் தனி நபரோ அல்லது குழுவோ பொறுப்பேற்கவில்லை. இந்தச் சம்பவம்குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை எந்தத் கருத்தும் கூறவில்லை.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து உள்துறை அமைச்சகம், பாதுகாப்புத் துறை அமைச்சகம், சட்டம் மற்றும் தொழிலாளர் அமைச்சகங்கள் போன்றவற்றின் அதிகாரபூர்வ இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனால், அரசு இணையதளங்கள் எந்த அளவு பாதுகாப்பாக உள்ளது என்ற கேள்வியை முன்வைக்கத் தோன்றுகிறது. எனினும், இது ஒரு தொழில்நுட்ப கட்டமைப்புப் பிரச்னை என தேசியத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ம் வருடம் மட்டும், 199 அதிகாரபூர்வ அரசு இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது. மேலும், 2013 முதல்  2016-ம் ஆண்டு வரை சுமார் 700 இந்திய இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!