மாநிலங்களுக்குள் சரக்கு பறிமாற்றம்; 7 மாநிலங்களில் இ வே பில் அறிமுகம் | 7 states/Union Territories to roll out intra-state e-way bill tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 03:31 (25/05/2018)

கடைசி தொடர்பு:07:22 (25/05/2018)

மாநிலங்களுக்குள் சரக்கு பறிமாற்றம்; 7 மாநிலங்களில் இ வே பில் அறிமுகம்

மாநிலங்களுக்குள் சரக்குகள் கொண்டு செல்ல 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை முதல் இ வே பில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

மாநிலங்களுக்குள் சரக்குகள் கொண்டு செல்ல 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை முதல் இ வே பில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

நாட்டில் சரக்குகளை ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குறிப்பாக ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு எளிதாக கொண்டு செல்ல கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் இ வே பில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் குறி்பாக ரூ.50,000 க்கும் அதிகமாக பொருள்களைக் கொண்டு சென்றால் இது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மாநிலத்துக்குள்ளே சரக்குகள் கொண்டு செல்லவும் இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை சில மாநிலங்களில் மட்டுமே  செயல்படுகிறது.

இ வே பில்

இந்த நிலையில், வட கிழக்கு மாநிலமான மணிப்பூர், ஐந்து யூனியன் பிரதேசங்களில் மாநிலங்களுக்குள் ரூ.50,000க்கும் அதிக மதிப்பு கொண்ட சரக்குகளைக் கொண்டுசெல்ல இ வே பில் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களுக்குள் சரக்குகளைக் கொண்டுசெல்ல  இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளன.
சண்டிகர், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் & டையு, லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் இந்த புதிய நடைமுறை அறிமுகமாகிறது. இது நடைமுறைக்கு வந்த பிறகு தினமும் 12 லட்சம் இ வே பில்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த நடைமுறையால்  வரி வசூல் மிகவும் சிறப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.