வெளியிடப்பட்ட நேரம்: 08:18 (29/05/2018)

கடைசி தொடர்பு:11:52 (30/05/2018)

கடன் மோசடி... நிதி இழப்பு... ஓட்டமெடுக்கும் வங்கி முதலீட்டாளர்கள்

Twenty-one public sector banks (PSBs) have incurred losses totalling Rs 25,775 crore due to banking frauds in the financial year 2017-18, a Right to Information reply...

2017-18-ம் நிதியாண்டில் 21 இந்திய பொதுத் துறை வங்கிகள், வாராக்கடன், மோசடி உள்ளிட்டவை மூலம் 25,775 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதில் நீரவ் மோடியின் கடன் மோசடியால் அதிகம் பாதிப்புக்குள்ளானது பஞ்சாப் நேஷனல் வங்கிதான். இந்த வங்கிக்கு, மேற்கூறிய காலகட்டத்தில் 6,461.13 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சந்திரசேகர் காவுட் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் மனுத்தாக்கல் செய்து பெறப்பட்ட பதிலில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

Punjab National bank

பொதுத் துறை வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? 

மேலும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 2,390.75 கோடி ரூபாய், பேங்க் ஆஃப் இந்தியா 2,224.86 கோடி ரூபாய், பேங்க் ஆஃப் பரோடா 1,928.25 கோடி ரூபாய், அலகாபாத் பேங்க் 1,520.37 கோடி ரூபாய், ஆந்திரா வங்கி 1,303.30 கோடி ரூபாய் மற்றும் யூகோ பேங்க் 1,224.64 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பைச் சந்தித்துள்ளன.

அதேபோன்று ஐடிபிஐ 1,116.53 கோடி ரூபாய், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 1,095.84 கோடி ரூபாய், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 1.084.50 கோடி ரூபாய், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 1,029.23 கோடி ரூபாய் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் 1,015.79 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளன.

மேலும், கார்ப்பரேஷன் பேங்க் 970.89 கோடி ரூபாய், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா 880.53 கோடி ரூபாய், ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் 650.28 கோடி ரூபாய், சிண்டிகேட் வங்கி 455.05 கோடி ரூபாய், கனரா பேங்க் 190.77 கோடி ரூபாய், பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க் 90.01 கோடி ரூபாய், தேனா வங்கி 89.25 கோடி ரூபாய், விஜயா பேங்க் 28.58 கோடி ரூபாய், இந்தியன் பேங்க் 24.23 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளதாக ரிசர்வ் பேங்க் தெரிவித்துள்ளது. அதே சமயம், எந்த மாதிரியான மோசடிகளால் இந்த வங்கிகள் இழப்பைச் சந்தித்தன என்பதை ரிசர்வ்  பேங்க் தெரிவிக்கவில்லை.

தனியார் வங்கிகள்  

பொதுத் துறை வங்கிகளின் நிலை இதுவென்றால், நிர்வாகம் சிறப்பாக நடப்பதாகக் கூறப்படும் தனியார் வங்கிகள் மீதும் சமீபகாலமாகக் குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பல்வேறு முன்னணி தனியார் வங்கிகள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பல மோசடிகளை அரங்கேற்றியதாகவும், சாமான்ய மக்கள் ஓரிரண்டு 2,000 ரூபாய் தாளுக்கு அல்லாடியபோது பல கோடி ரூபாயைத் தொழிலதிபர்களுக்கும் கறுப்புப் பண முதலைகளுக்கும் கமிஷன் வாங்கிக்கொண்டு கொடுத்ததாக பல்வேறு தனியார் வங்கிகளின் அதிகாரிகள் மீது புகார்கள் எழுந்தன.

icici

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் ஐசிஐசிஐ பேங்க் மீதான கடன் மோசடி புகார், பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. 20 வங்கிகளில் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திவாலாகும் நிலைக்குச் சென்றுள்ள வீடியோகான் நிறுவனத்துக்கு, ஐசிஐசிஐ கொடுத்த 3,250 கோடி ரூபாய் கடன் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. ஐசிஐசிஐ தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சாந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சார் நடத்திவரும் நிறுவனத்தில், வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத் மறைமுகமாக முதலீடு செய்தார் என்பதும், இதற்குப் பிரதிபலனாக வீடியோகான் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கியதாகவும், குடும்ப நிறுவனத்துக்குச் சாதகமாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வீடியோகான் நிறுவனத்துக்கு சாந்தா கொச்சார் கடன் வழங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Bank corruption

 

இந்த விவகாரம் வெளிவந்தவுடன் ஐசிஐசிஐ பங்குகளின் விலை சரிந்து, அதன் முதலீட்டாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தியது.

பாதிப்புகள் என்ன?

இதுபோன்று வங்கி அதிகாரிகளின் உடந்தையோடு, குறிப்பாக பொதுத் துறை வங்கிகளில் நடந்தேறும் இதுபோன்ற கடன் மோசடிகள் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளதாகவும், இதனால் வங்கிகளுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படுவது மட்டுமல்லாது, அவற்றின் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், இத்தகைய கடன் மோசடிகளால் நியாயமாகக் கடன் வாங்க நினைப்பவர்களுக்கும் கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு தொழில்கள் பாதிக்கப்படும் என்றும், இது எதிர்கால இந்தியப் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்றும் அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

வங்கிகள்

இந்த நிலையில்,  பல்வேறு வங்கிகளின் 2017-18ம் நிதியாண்டுக்கான நான்காவது காலாண்டு முடிவுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இதில் பெரும்பாலான வங்கிகள் வாராக்கடன் மோசடியால் பெரும் நிதி இழப்பையும், வருவாய் இழப்பையும் சந்தித்துள்ளன. இதனால், வங்கிப் பங்குகள் மீது முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், அவற்றை விற்றுவிட்டு வெளியேறுவதால், அவற்றின் மதிப்பு சரிந்துவருகின்றன.

இழந்த மதிப்பை என்ன செய்து மீட்டெடுக்கப்போகின்றன வங்கிகள்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்