`எனது ஆட்சியில் வளர்ச்சி..! மோடி ஆட்சியில்?’ - அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட கார்ட்டூன் 

பிரதமர் மோடி அரசின் நான்கு ஆண்டுக்கால ஆட்சியைக் கேலி செய்யும் விதமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கார்ட்டூன் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கார்ட்டூன்

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைப் பா.ஜ.க-வினர் வெகு விமரிசையாகக் கொண்டாடினர். இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மோடி அரசை விமர்சிக்கும் விதமாகக் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கார்ட்டூன்

அந்தக் கார்ட்டூனில், `டெல்லியில் நடைபெற்று வரும் தனது ஆட்சியின்கீழ், குடிநீர், மின்சாரம், மருத்துவம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் வழங்கிய இலவசத் திட்டங்களை, அடுக்கடுக்காகக் குறிப்பிட்டுள்ளார். தனது ஆட்சியின் சாதனைகளை உயரமான கட்டடமாகக் காட்டியுள்ளார். அதன் அருகில் வறண்ட ஒரு காலி இடத்தில் வேலிகள் போட்டு, கட்டுமானம் நடந்துகொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டு, பா.ஜ.க-வின் பலகை வரையப்பட்டுள்ளது. இந்தக் கார்ட்டூனை வெளியிட்டு மோடி அரசின் சாதனைகளைக் கேலி செய்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!