வெளியிடப்பட்ட நேரம்: 15:43 (08/06/2018)

கடைசி தொடர்பு:15:47 (08/06/2018)

தாமிரத்துக்கான தேவையில் இந்தியாவின் நிலை என்ன?

ஸ்டெர்லைட் மூட்பபடுவதா்ல இ்ந்திய தாமிர சந்தையில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படும்.

தாமிரத்துக்கான தேவையில் இந்தியாவின் நிலை என்ன?

''தமிழக மின்வாரியத்துக்கு தேவையான டிரான்ஸ்பார்மர்களை தயாரிக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தாமிரம் பெறப்பட்டு வந்தது. தற்போது ஆலை மூடப்பட்டு விட்டதால் தாமிரம் பெற முடியாத சூழல் ஏற்பட்டு டிராஸ்பார்மர்கள் தயாரிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. விரைவில் பிற வழிகளில் இருந்து தாமிரம் பெறப்பட்டு, டிரான்ஸ்பர்மர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரத் தட்டுப்பாடு காரணமாக மின்மாற்றிகளை சரி செய்ய காலதாமதம் ஏற்படுகிறது'' என்று சட்டசபையில் இன்று மின்வாரிய அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். சென்னை திருவொற்றியூர் பகுதியில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு ஏற்பட்டது. இது குறித்து தி.மு.க. எம்.எல்.ஏ கே.பி.பி. சாமி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தங்கமணி இவ்வாறு பதில் அளித்தார். அமைச்சரின் கூற்று எந்தளவுக்கு உண்மை.. தாமிரத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு என்ன... இந்தியாவின் தாமிரத்தேவை எவ்வளவு என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம். 

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில் தாமிரத்தின் பயன்பாடு இருந்து வந்துள்ளது. பண்டைய காலத்தில் மருத்துவ அறுவைசிகிச்கைக்கு, தாமிரத்தால் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் பயன்பட்டுள்ளன. கோயில் சிலைகள் உருவாக்க,  தாமிரம் முக்கியமான உலோகம். இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மட்டும் 40 சதவிகிதத்தைப் பூர்த்திசெய்தது. அதாவது, ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரத்தை தூத்துக்குடி ஆலை உற்பத்தி செய்தது. 

காப்பர்

இந்தியாவில் தாமிர உற்பத்தியில் மூன்று பெரிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மத்திய அரசுக்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம் ஆண்டுக்கு 99,500 டன் தாமிரத்தை உற்பத்தி செய்கிறது. கொல்கத்தாவை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்துக்கு, ராஜஸ்தானில் கேத்ரி மற்றும் ஜார்கண்டில் சிங்பம் பகுதிகளில் ஆலைகள் உள்ளன. இந்தியாவில் அதிகளவில் தாமிரத்தை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் `ஹிண்டால்கோ'. ஆதித்யா பிர்லா குழுமத்துக்குச் சொந்தமான இந்த நிறுவனம்,  ஆண்டுக்கு 5 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்கிறது. ஆசியாவின் முன்னணி காப்பர் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான ஹிண்டால்கோவுக்கு தலைமையகம் மும்பையில் உள்ளது. 

அடுத்ததாக ஸ்டெர்லைட் நிறுவனம் 4 டன் தாமிரத்தை உற்பத்தி செய்யும் திறன்கொண்டது. இதன் தாய் நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸ் லண்டன் பங்குச்சந்தையில் பதிவுசெய்யப்பட்டது. இந்த நிறுவனம் உலகளவில் துத்தநாகம், இரும்புத்தாது, அலுமினியம், தாமிர உற்பத்தியில் ஈடுபட்டுவருகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்களும் வேதாந்தா குழுமத்துக்குள் உள்ளன. இந்தியாவின் துத்தநாக உற்பத்தியில் வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான Hindustan Zinc நிறுவனம்தான் 70 சதவிகிதத்தைப் பூர்த்திசெய்கிறது. வெள்ளி உற்பத்தியிலும் இந்த நிறுவனமே முன்னணியில் உள்ளது. 

இந்தியாவின்  மொத்த தாமிர உற்பத்தியில் 40 சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிடமிருந்து சீனாதான் அதிகளவில் தாமிரத்தை இறக்குமதி செய்கிறது. 2016-17ம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட தாமிரத்தில் 41 சதவிகிதம் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரானது. ஒரு கிலோ தாமிரத்தின் விலை 452 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. லண்டன் உலோக வர்த்தகச் சந்தையில் ஒரு டன் தாமிரத்தின் விலை 6,900 அமெரிக்க டாலர்.

ஸ்டெர்லைட் மூடப்பட்டுள்ளதால் வேதாந்தா குழுமத்தின் பங்கு மதிப்பு பெரும்சரிவைச் சந்தித்திருக்கிறது.  இந்தியாவில் முன்னணியில் உள்ள 10 உலோக உற்பத்தி நிறுவனங்களில் இந்த ஆண்டு பங்குச்சந்தையில் பெரும் சரிவைச் சந்தித்தது வேதாந்தா குழுமம்தான். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால், வேதாந்தா குழுமத்துக்கு 200 முதல் 250 மில்லியன் அமெரிக்க டாலர் வரை நஷ்டம் ஏற்படும்.

ஸ்டெர்லைட் ஆலை மூடல்

கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த தாமிர உற்பத்தியாளர்கள் மாநாட்டில் பேசிய ஹிண்டால்கோ நிறுவனத்தின் தலைவர் குமாரமங்கலம் பிர்லா ``உலகளவில் தாமிரத்தின் தேவை 22 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்க அதிகளவில் தாமிரம் பயன்படுவதே இதற்குக் காரணம். எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்திக்கு மட்டும் ஆண்டுக்கு 1.2 டன் தாமிரம் தேவை. உலகம் முழுக்க ஆண்டுக்கு 23 மில்லியன் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 28 மில்லியன் டன்னாக இது அதிகரிக்கும்'' என்று தெரிவித்திருந்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்