திருட்டு பயம்! - தண்ணீருக்கு பூட்டுப்போடும் மக்கள்

ராஜஸ்தானில், திருட்டுக்குப் பயந்து தண்ணீர் ட்ரம்களுக்கு பூட்டுப்போட்டு குடிநீரைப் பாதுகாத்துவருகின்றனர் அப்பகுதி மக்கள்.

திருட்டு

இந்த ஆண்டு தொடங்கிய கோடைக்காலம், இந்தியாவில் உள்ள பல மாநிலங்களை வறட்சிக்குள்ளாக்கியுள்ளது. சில இடங்களில் அவ்வப்போது சிறிது மழை பெய்தாலும், வட மாநிலங்களில் தாங்க முடியாத அளவுக்கு வெயில் வாட்டிவதைக்கிறது. இதனால், பல பகுதிகளிலும் நிலத்தடி நீர் வற்றி, குடிப்பதுக்குக்கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றக்குறையால், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் உள்ள வைஷாலி  நகரத்து மக்கள், திருட்டுக்குப் பயந்து தங்கள் வீடுகளில் இருக்கும் தண்ணீர் ட்ரம்களுக்கு பூட்டுப் போட்டு பாதுகாத்துவருகின்றனர். இதுகுறித்துப் பேசிய அப்பகுதி மக்கள், “ எங்களுக்கு தினமும் குடிப்பதுக்குக்கூட தண்ணீர் இல்லை. எங்களுக்குத் கிடைக்கும் தண்ணீரைச் சேமித்து, பூட்டுப் போட்டு வைத்துக்கொள்வோம்.” எனத் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!