Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

`15 கி.மீ. நடந்துதான் போகவேண்டும்!’ - பழங்குடியினருக்குக் கழிப்பறை கட்டிக் கொடுத்த பெண் வனத்துறை அதிகாரி

கேரளாவில் மலைவாழ் மக்களுக்குத் தனது சம்பளத்தைக் கொண்டு சுமார் 500 கழிப்பறைகளைப் பெண் வனத்துறை அதிகாரி ஒருவர் கட்டிக்கொடுத்துள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. 

சுதா

credit: indianwomenblog.org

கொச்சியிலிருந்து 73 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குட்டம்புழா கிராமம். முற்றிலும் மலைப்பிரதேச பகுதியான இங்கு  குறிப்பிட்ட அளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள் அவ்வளவாக இல்லை. இதனால் மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்பகுதியில் வனத்துறை அதிகாரியாக வேலைசெய்பவர்தான் சுதா. கணவரை இழந்த இவர், தனியாக வசித்து வந்தார். சுகாதாரமற்ற முறையில் இப்பகுதி மக்கள் இருப்பதைக் கண்ட வனத்துறை அதிகாரி சுதா, அவர்களுக்கு உதவ நினைத்தார். அதன்படி தான் வாங்கும் சம்பளத்தைக் கொண்டு இக்கிராம மக்களுக்குக் கழிப்பறைகள் கட்டிக்கொடுத்தார். இதனை அறிந்த அரசு, இவரைத் திறந்தவெளி மலம் கழித்தலுக்கு எதிரான பிரசாரத்தில் இணைத்தது. குட்டம்புழா பஞ்சாயத்திலிருந்து மலைவாழ் கிராமங்களுக்கு மூன்று மணி நேரம் ஆகும். அதுவும் நடந்துதான் போக வேண்டும். 

இதனால் கட்டட கான்ட்ராக்டர்கள் யாரும் இவருக்கு உதவ முன்வரவில்லை. அவர்களுக்கு அதிக தொகை கொடுக்க வேண்டியிருக்கும். இதனால் தனியொரு ஆளாக முயற்சி செய்து சுதா மலைவாழ் மக்களுக்கு உதவியுள்ளார். சுதாவின் முயற்சிக்கு எர்ணாகுளம் கலெக்டர் உதவ முன்வந்தார். சுதாவுக்கு உதவ ஆட்களை நியமித்தார். இவர்களின் உதவியால் கடந்த 3 மாதத்தில் 9 மலைவாழ் கிராமங்களுக்கு 497 கழிப்பறைகளைச் சுதா கட்டிக்கொடுத்துள்ளார். இவரின் முயற்சியைப் பாராட்டும் விதமாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவருக்கு விருது வழங்கிக் கௌரவித்துள்ளார். ஏற்கெனவே இவர் கடந்த 2006ம் ஆண்டு சிறந்த வனத்துறை அதிகாரிக்கான மாநில அரசின் விருது பெற்றுள்ளார். 52 வயதான இந்தப் பெண் வனத்துறை அதிகாரிக்குப் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement