`தமிழகத்திலிருந்து ஒருவர்...குஜராத்திலிருந்து 7 பேர்!’ - அதிர்ச்சியாகும் நீட்!

நீட் தேர்வின் முடிவை வெளியிட்டிருக்கிறது மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. இதில் டாப் 50 மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி மட்டுமே இடம்பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் குஜராத்தைச் சேர்ந்த 7 பேரும், டெல்லியைச் சேர்ந்த 8 பேரும் இடம்பிடித்துள்ளனர். 

நீட் தேர்வு

டாப் 50யில் இடம்பிடித்தவர்களின் விவரங்கள்

மாநிலம்  எண்ணிக்கை
டெல்லி  8 பேர்
குஜராத் 7 பேர்
ஆந்திரா  5 பேர்
ராஜஸ்தான் 4 பேர்
உத்தரபிரதேசம்  4 பேர்
ஹரியானா  3 பேர்
பஞ்சாப் 3 பேர்
மகாராஷ்ட்ரா  3 பேர்
மத்திய பிரதேசம் 2 பேர்
ஒடிசா 2 பேர்
சண்டீகர் 2 பேர்
தெலங்கானா 2 பேர்
மேற்கு வங்காளம் 2 பேர்
பீகார் 1 நபர்
தமிழ்நாடு 1 நபர்

கடந்த ஆண்டு தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுதியவர் 83,359 பேர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 32,368 பேர். அதாவது தேர்ச்சி விகிதம் 38.83 சதவிகிதம். இந்த ஆண்டு 1,14,602 பேர் தேர்வு எழுதிய நிலையில், 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 39.55% பேர். கடந்த ஆண்டை விட 30,000 பேர் கூடுதலாக தேர்வு எழுதியுள்ளனர். இந்த ஆண்டு, அகில இந்திய அளவில் 56.27 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

டாப் 50 மதிப்பெண் பெற்றவர்களில், டெல்லியைச் சேர்ந்த 8 பேர், குஜராத்தில் 7 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்திலிருந்து தலா 4 பேர், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா, பஞ்சாப்பைச் சேர்ந்த தலா 3 பேர், மத்திய பிரதேசம் 2 பேர், ஒடிசாவிலிருந்து 2 பேர், சண்டிகாரிலிருந்து 2 பேர், தெலங்கானாவிலிருந்து 2 பேர், மேற்கு வங்காளத்திலிருந்து 2 பேர், பீகாரிலும், தமிழ்நாட்டிலிருந்தும் ஒருவர், இதரப் பகுதியிலிருந்து ஒருவர் என டாப் 50 இடத்தைப் பிடித்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!