உத்தவ் தாக்கரேவுடன் அமித் ஷா சந்திப்பு..! கூட்டணியை நிலைநாட்ட பா.ஜ.க முயற்சி | BJP chief Amit Shah decided to meet Shiv Sena chief Uttav Thackarey today!

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (06/06/2018)

கடைசி தொடர்பு:07:00 (06/06/2018)

உத்தவ் தாக்கரேவுடன் அமித் ஷா சந்திப்பு..! கூட்டணியை நிலைநாட்ட பா.ஜ.க முயற்சி

அமித் ஷா

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா கட்சியை மீண்டும் கூட்டணியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா இன்று மும்பையில் சந்தித்துப் பேசவுள்ளார். பி.ஜே.பி - சிவசேனா கூட்டணியை புதுப்பிக்கும் முயற்சியாக அமித் ஷா இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளார் என்று கூறப்படுகிறது. 

அடுத்தாண்டு நாடாளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பலப்படுத்துவதில் பி.ஜே.பிதற்போது தீவிரம் காட்டி வருகிறது. மகாராஷ்டிராவில் சமீப காலமாக பி.ஜே.பி-யை கடுமையாக விமர்சித்து வரும் சிவசேனா, பி.ஜே.பி.-யுடன் கூட்டணி இல்லை. எதிர்வரும் மகாராஷ்டிர சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தது.

இதனால், பி.ஜே.பி-யுடன் அக்கட்சி கொண்டிருந்த 30 ஆண்டு கால கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்தே பி.ஜே.பி-யை அக்கட்சி கடுமையாக விமர்சித்து வந்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பி.ஜே.பி-க்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், பி.ஜே.பி. தேசிய தலைவர் அமித் ஷா, சிவசேனாவுடனான விரிசலைப் போக்கும் வகையில் மும்பையில் இன்று மாலை உத்தவ் தாக்கரேயை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் பி.ஜே.பி- சிவசேனா கூட்டணி மீண்டும் வசப்படுமா என்பது பின்னர் தெரியவரும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க