பா.ஜ.க எம்.பி தயாரிப்பில் படமாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு!

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இதில், மோடியின் கதாபாத்திரத்தில்  பிரபல நடிகர் பரேஷ் ராவல் நடிக்க உள்ளார். 

மோடி

கடந்த 2014-ம் ஆண்டு, பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அதற்குக் காரணம் நரேந்திர மோடி. பா.ஜ.க பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்றதற்கு மோடி அலைதான் காரணம் என அக்கட்சியினர் கூறிவருகின்றனர். இதையடுத்து அவர் பிரதமராகப் பதவியேற்றார். அதன் பிறகு, அவர்மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினாலும், அவரது தலைமையில் தொடர்ந்து பா.ஜ.க வட மாநிலங்களில் வெற்றிக்கொடி நாட்டிவந்ததால், பா.ஜ.க-வினர் மத்தியில் மோடிக்கான கிரேஸ் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. 

இதற்கிடையே, மோடியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க முடிவெடுத்து, அதற்கான வேலைகள் நடைபெற்றுவருகின்றன. பிரபல பாலிவுட் நடிகரும், பா.ஜ.க எம்பியுமான பரேஷ் ராவல்தான் மோடியாக நடிக்க உள்ளார். அவரே இந்தப் படத்தைத் தயாரிக்கவும் உள்ளார். தற்போது, சஞ்சய் தத்தின் பயோபிக் படமான 'சஞ்சு'வில் நடித்துவருகிறார். எனினும் மோடி படத்திற்கான கதை ரெடியாக உள்ளது என்றும், வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பரேஷ் ராவல்

மேலும், மற்ற நடிகர்கள் தேர்வு தற்போது நடந்துவருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஆர்.எஸ்.எஸ் வரலாறு படமாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த அறிவிப்பு பா.ஜ.க-வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!