`மனைவியின் ஏடிஎம் கார்டை கணவன் பயன்படுத்தக் கூடாது' - எஸ்.பி.ஐ விதிமுறையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்!

மனைவியின் ஏடிஎம் கார்டை கணவன் பயன்படுத்தக் கூடாது. அது விதிமீறல் என ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. 

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

பெங்களூருவின் மரதஹள்ளியைச் சேர்ந்தவர், வந்தனா. இவர், கடந்த 2013-ம் ஆண்டு, கணவர் ராஜேஷ்குமாரிடம் தனது ஏடிஎம் கார்டை 25,000 ரூபாய் பணம் எடுத்துவரச் சொல்லியிருக்கிறார். அவரும், அருகில் உள்ள எஸ்.பி.ஐ  ஏடிஎம் சென்டருக்குச் சென்று கார்டை செலுத்தி பணம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால் பணம் வரவில்லை. மாறாக, ரூ.25,000 பணம் எடுத்ததாக ரசீது மட்டும் வந்தது. இதையடுத்து, அவர் வங்கியின் உதவி மையத்தை அணுகி புகார் அளித்துள்ளார். அவர்களும் பணத்தை திருப்பிச் செலுத்துவதாகக் கூறியுள்ளனர்.  அதன்பின் வங்கியைத் தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளனர். ஆனால், வங்கித் தரப்பில் பணம் தர முடியாது எனக் கூறவே, தம்பதியினர் பெங்களூர் நுகவோர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட சிசிடிவி பதிவிலும் பணம் வராதது பதிவாகியுள்ளது. நீதிமன்றத்தில், வங்கி தரப்பில் வாதிடப்பட்டது.  

அதில், ``மனைவியின் ஏடிஎம் கார்டை கணவன் பயன்படுத்தியது தவறு. வங்கி விதிமுறைப்படி கணவனிடம் மனைவி ஏடிஎம் பாஸ்வேர்டை பகிர்ந்தது விதி மீறல் ஆகும். அவர், காசோலை மூலமாகவோ அல்லது அங்கீகார கடிதத்தின் மூலமாகவோ பணம் எடுக்க கணவனை பணம் எடுக்க அனுப்பியிருக்கலாம்'' என வாதிடப்பட்டது. சுமார் மூன்றரை ஆண்டுகளாக நடந்துவந்த இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. அதில், வங்கியின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஏடிஎம் கார்டை கணவரிடமோ அல்லது உறவினர்களிடமோ மனைவி பகிரக் கூடாது. கணவன் மனைவிக்கு மட்டும் இந்த உத்தரவு அல்ல. அனைவருக்கும்தான். ஏடிஎம் கார்டை சம்பந்தப்பட்டவர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டு, வழக்கைத் தள்ளுபடிசெய்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!