வெளியிடப்பட்ட நேரம்: 05:48 (09/06/2018)

கடைசி தொடர்பு:18:22 (09/06/2018)

மம்தா பானர்ஜி ஜூன் 22-ல் சீனா பயணம்: மேற்கு வங்க வளர்ச்சிக்காக ஒப்பந்தங்கள் கையெழுத்து!

மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, வரும் ஜூன் 22-ம் தேதி சீனா செல்கிறார். இந்தப் பயணத்தின்போது, சீனாவுடன் மம்தா பானர்ஜி பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என்று தெரிகிறது.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநில வளர்ச்சித் திட்டங்களுக்காக, சீனாவுடன் இணைந்து செயல்படும் வகையில், மம்தா பானர்ஜி ஒன்பது நாள் பயணமாக வரும் 22-ம் தேதி சீனா செல்கிறார். சீனத் தலைநகர் பீஜிங், ஷாங்காய் மற்றும் ஜினான் நகரங்களுக்குச் சென்று பார்வையிடும் அவர், சீன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் மம்தா பானர்ஜி கையெழுத்திட உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மம்தா பானர்ஜி சீனா செல்வது இதுவே முதல்முறை. இந்தியாவிலேயே நான்காவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக மேற்கு வங்கம் திகழ்கிறது. இந்நிலையில், மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில், சீனா சென்று அந்நாட்டுடன் இணைந்து வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த மம்தா அங்கு செல்லவிருக்கிறார். இதையடுத்து அவருடைய இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க