மொத்த மதிப்பெண்ணைவிடக் கூடுதல் மதிப்பெண் வழங்கிய தேர்வு வாரியம் - அதிர்ச்சியில் பீகார் மாணவர்கள்!

பீகாரில் நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வில் மொத்த மதிப்பெண்ணைக் காட்டிலும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பீகாரில் நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வில் மொத்த மதிப்பெண்ணைக்காட்டிலும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பீகார்

பீகார் பள்ளித் தேர்வு வாரியம் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிட்டது. அதில் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலருக்கு தாங்கள் எழுதிய தேர்வின் மொத்த மதிப்பெண்ணைக் காட்டிலும், கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தேர்வுக்கே வராத மாணவர்கள் சிலருக்கு மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது மாணவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பீகாரில் உள்ள அர்வால் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் பீம் குமார் பேசுகையில், “கணித பாடத்துக்கு நான் தேர்வு எழுதிய மொத்த மதிப்பெண் 35. ஆனால், 38 மதிப்பெண் பெற்றதாகத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இது எனக்கு ஆச்சர்யத்தைத் தரவில்லை. காரணம் இது போன்று ஏற்கெனவே நிகழ்ந்துள்ளது” தெரிவித்தார். 

 அதேபோல தர்பாங்கா பகுதியைச் சேர்ந்த ராகுல்குமார் 35 மதிப்பெண்ணுக்கு எழுதிய கணித தேர்வில் அவருக்கு 40 மதிப்பெண்  வழங்கியுள்ளது பீகார் மாநிலப் பள்ளித் தேர்வு வாரியம். இதேபோல ஜன்வீன் சிங் என்ற மாணவி பேசுகையில், உயிரியல் தேர்வுக்கு நான் செல்லவில்லை, ஆனால், எனக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். பீகார் பள்ளி கல்வி வாரியத்தின் இந்தக் குளறுபடி, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!