மகாராஷ்ட்ரா முதல்வருக்குக் கொலை மிரட்டல்

மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு மாவோயிஸ்ட்டுகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கடந்த வாரம் இரண்டு கடிதம் வந்துள்ளன. அதில் கடந்த ஏப்ரல் மாதம் கட்சிரோலி மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 39 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொள்ளப்பட்டது குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு கடிதங்களிலும் மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டது தொடர்பாகவே எழுதியுள்ளதாக முதல்வர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கடிதம் முதல்வரின் அலுவலகத்துக்கே வந்ததாகவும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் வந்த பிறகு, முதல்வர் மற்றும் அவரின் வீட்டுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இதே போன்று பிரதமர் மோடியைக் கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதி செய்வதாக டெல்லியில் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதுவும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பட்டியலின மக்களின்மீது நடத்தப்பட்ட துப்பாகிச்சூடு தாக்குதல் மற்றும் கலவரம் தொடர்பாகக் கைது செய்தவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!