வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு; விளக்கமளித்த தேர்தல் ஆணையம்!

இடைத்தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

இடைத்தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

சமீபத்தில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.  இதில் உத்தரப்பிரதேச மாநிலம் கைரானா மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலம் பந்தாரா-கோண்டியா போன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் சிக்கல் நிலவியது. வாக்குப்பதிவின்போது திடீரென்று வாக்கு இயந்திரம் பழுதாகியதால் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் பெரும் குழப்பம் நீடித்தது. இது தொடர்பாகப் பெரும்பாலானோர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து முறையிட்டனர். 

இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம் அதிகளவில் ஒளிக்கதிர் வீசும் இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருந்தது. இதுவே வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறுக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் வாக்காளர் இயந்திரத்தில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு வடிவமைப்பில் மாற்றம் கொண்டுவரப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!