வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (09/06/2018)

கடைசி தொடர்பு:18:30 (09/06/2018)

3 அடி பாம்பிடமிருந்து உயிர் தப்பிக்கப் போராடும் 5 அடி பாம்பு! - வைரல் வீடியோ

பெரிய விலங்குகளிடமிருந்து சிறிய விலங்குகள் தங்களின் உயிரை தற்காத்துக்கொள்வதற்காகப் போராடுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இதற்கு நேர்மாறாகச் சிறிய பாம்பிடமிருந்து பெரிய பாம்பு ஒன்று தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள போராடும் வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. 

பாம்பு

ஒடிசாவில் உள்ள கோராபுட் மாவட்டத்தில் சுனாபிடா நகர் பகுதியில், சிறிய பாம்பு ஒன்று பெரிய பாம்புடன் சண்டையிட்டு வருவதாக விலங்கு மீட்புக் குழுவினர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாம்புகளைப் பிடிக்க விலங்கு மீட்புக் குழுவினர்கள் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். அப்போது, அடுத்த வேலை உணவுக்காக 3 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று, 5 அடி நீளம் கொண்ட பாம்பின் தலைப்பகுதிக்கு அருகில் சுற்றி, அந்தப் பாம்பை கொல்ல முயன்றுள்ளது. இதைக் கண்ட மீட்பு குழுவில் உள்ள சுஜித்குமார் மொஹந்தி என்பவர், பாம்புகள் சண்டையிடும் காட்சியை வீடியோ எடுத்துள்ளார். 

அந்த வீடியோவில், `ட்டிரிங்கட் (trinket) வகையைச் சேர்ந்த பாம்பானது, அதைவிட உருவத்திலும் விஷத்திலும் பலம் நிறைந்த ரேட் பாம்பின், கழுத்தை இறுக்கிப் பிடித்து, கொலை செய்ய முயன்று வருகிறது. இதனால், சிறைபிடித்துள்ள பாம்பிடமிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக உருண்டு புரளுகிறது அந்தப் பாம்பு. அந்தப் பாம்புகளைப் பிரித்த அந்தக் குழுவினர் அவற்றைத் தனித்தனியாகப் பிரித்து காட்டுக்குள் விட்டனர். அந்தப் பாம்புகள் விஷத்தன்மை அற்றவையாகும். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

via GIPHY