கொச்சுவேலி - மங்களூர் இடையே அந்த்யோதயா ரயில் சேவை தொடக்கம்!

கொச்சுவேலி முதல் மங்களூர் வரை செல்லும் அந்த்யோதயா ரயில் சேவையை மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கொஹைல் கொடியசைத்து தொடக்கி வைத்தார்

கொச்சுவேலி முதல் மங்களூர் வரை செல்லும் அந்த்யோதயா ரயில் சேவையை மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கொஹைல் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

ராஜன் கொஹைல்

குறைந்த கட்டணத்தில் ரயில்சேவையை மக்களுக்கு வழங்கும் அந்த்யோதயா ரயில் சேவையை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. தமிழகத்தில் 200 ரூபாய் கட்டணத்தில் செங்கோட்டை முதல் சென்னை வரையிலான முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட அந்தியோதயா ரயில் சேவை நேற்று தொடங்கியது. இதேபோல் கேரள மாநிலம் கொச்சுவேலி முதல் மங்களூர் வரை செல்லும் அந்த்யோதயா ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. கொச்சுவேலி ரயில் நிலையத்தில் நடந்த தொடக்க விழாவில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கொஹைல் மற்றும் மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தனம் ஆகியோர் கொடியசைத்து ரயிலை இயக்கி வைத்தனர். கொச்சுவேலி - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்திற்கு இரண்டு நாள்கள் இயக்கப்படுகிறது.

அந்த்யோதயா ரயில்

வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு கொச்சுவேலியிலிருந்து புறப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் மறுநாள் காலை 9.15 மணிக்கு மங்களூரை சென்றடையும். மங்களூரிலிருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 8.15 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும். முழுவதும் முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட அந்த்யோதயா எஸ்க்பிரஸ் ரயிலில் குஷன் சீட்டுகள், எல்.இ.டி. விளக்குகள், மொபைல், லேப்டாப் சார்ஜ் செய்வதற்கான பிளக் பாயிண்ட், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!