மும்பையில் கனமழை; வாகனப் போக்குவரத்து கடும் பாதிப்பு!

மும்பை மழை - தென்மேற்குப் பருவமழை தொடக்கம்

தென்மேற்குப் பருவமழை தொடங்கியதையொட்டி, மும்பையில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. மழை நீர் தேங்கியதால் மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ரயில் சேவை சிறிதுநேரம் தாமதமானது.

மும்பையை ஒட்டியுள்ள தானே- கொங்கன் பகுதிகளிலும், கோவா மற்றும் கர்நாடகக் கடலோரப் பகுதிகளிலும் தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து, இந்தப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் மும்பையில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சாலைகள் மற்றும் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால், புறநகர் ரயில் சேவைகள் மற்றும் வாகனப் போக்குவரத்து சில மணி நேரம் தாமதமானது. 

மும்பை மட்டுமல்லாமல் அகமத்நகர், பார்பானி உள்ளிட்ட மகாராஷ்டிராவின் இதர பகுதிகளிலும் நேற்று மிதமான மழை பெய்தது. இந்தாண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருப்பதால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!