வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (10/06/2018)

கடைசி தொடர்பு:07:19 (11/06/2018)

மொபைல் போனில் விளையாடிய 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!

மொபைல் போனை வைத்து பத்து வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கையில் எதிர்பாராமல் போன் பேட்டரி வெடித்தது. இதில், படுகாயமடைந்த சிறுவன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். 

மொபைல் போன்

இன்றைய தலைமுறை குழந்தைகளின் பிரத்யேக விளையாட்டுப் பொருளாக மொபைல் போன்கள் மாறிவிட்டன. தகவல் பரிமாற்றம் மற்றும் தொடர்பு சாதமாக  உபயோகிக்கப்பட்ட மொபைல்களை தற்போது, பொழுதுபோக்குக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவு சில சமயங்களில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது. 

மத்தியப்பிரதேச மாநிலம் செஹூர் பகுதியில் திலீப் என்ற பத்து வயது சிறுவன், தனது தாத்தாவில் மொபைல் போனை வைத்து விளையாடிக் கொண்டு இருக்கையில், போனில் இருந்த பேட்டரியை வெளியே எடுக்க முயன்றான். அப்போது, போனில் இருந்த பேட்டரி எதிர்பாராமல் வெடித்து. இதனால், சிறுவனின் நெஞ்சு மற்றும் கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக, போபால் நகரில் உள்ள ஹாமிதியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.