ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

வர்த்தக நேர இறுதியில் துவண்டு சிறு லாபத்துடன் முடிந்தது சந்தை  

ஒரு நல்ல தொடக்கமும் பின்னர் ஒரு சிறப்பான ஏறுமுகமும் கண்டிருந்தாலும், இறுதியில் சொற்பமான லாபத்துடன்தான் இன்று இந்திய பங்குச் சந்தை முடிவுற்றது.

மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் இன்று ஒரு கட்டத்தில் 260 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருந்தாலும், இறுதியில் 35,483.47 என்ற நிலையில், 39.80 புள்ளிகள் அதாவது 0.11 சதவிகிதம் மட்டுமே லாபம் பெற்று முடிந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்ட்டி குறியீடு 19.30 புள்ளிகள், அதாவது 0.18 சதவிகிதம் லாபத்துடன் 10,796.85-ல் முடிந்தது.

G7 மாநாட்டின் மூலம் ஒரு பெரிய சாதகமான நிலை உருவாகாத போதும், நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் - வட கொரியத் தலைவர் பேச்சு வார்த்தை புவியியல் அரசியல் பற்றி நிலவி வரும் கவலைகளை குறைக்க ஓரளவு உதவும் என்ற நம்பிக்கை காரணமாக ஆசியச் சந்தைகளில் நிலவிய பாசிட்டிவான போக்கு இந்தியச் சந்தையிலும் ஒரு முன்னேற்றத்துக்கு வித்திட்டது. 

இருப்பினும், வெளிவரவிருக்கும் பணவீக்கம், மற்றும் தொழில் உற்பத்தி பற்றிய அறிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பின் காரணமாக முதலீட்டாளர்கள் ஒரு பாதுகாப்பு உணர்வுடன் செயல்பட விரும்பியதால், உயர் நிலையில் பங்குகள் தகுந்த சப்போர்ட் பெற இயலவில்லை.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

பார்தி ஏர்டெல் 3.2%
பஜாஜ் ஃபைனான்ஸ் 2.9%
க்ராஸிம் இண்டஸ்ட்ரீஸ் 1.9%
அல்ட்ராடெக் சிமென்ட் 1.85%
ஜீ டெலி 1.4%
ஹின்டால்க்கோ, டாக்டர் ரெட்டி'ஸ், சன் பார்மா, மாருதி சுசூகி மற்றும் பார்த்த பெட்ரோலியம் 1 முதல் 1.2 சதவிகிதம் உயர்ந்தன.

விலை இறங்கிய பங்குகள் :

டாடா ஸ்டீல் 2.3%
யு.பி.எல். 2.2%
எச்.சி.எல் டெக்னாலஜிஸ் 2.1%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1529 பங்குகள் விலை உயர்ந்தன. 1147 பங்குகள் நஷ்டத்துடனும் 156 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிவடைந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!