`மிரட்டி என்னைப் பணிய வைக்கமுடியாது'! - 63 குழந்தைகள் உயிரைக் காப்பாற்றிய டாக்டர் கஃபீல்கான் ஆவேசம்

எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன் என உத்தரப்பிரதேச மாநிலத்தில் 63 குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கஃபீல்கான் தெரிவித்துள்ளார்.

`எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன்' என உத்தரப்பிரதேச மாநிலத்தில் 63 குழந்தைகளைக் காப்பாற்றிய டாக்டர் கஃபீல்கான் தெரிவித்துள்ளார்.

கபீல்கான்


உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசுமருத்துவமனையில் ஆக்சின் சிலிண்டர் இல்லாததால் பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த அவலம் அரங்கேறியது. அப்போது அங்கு பணியாற்றிய மருத்துவர் கஃபீல்கான் தன்னுடைய சொந்தச் செலவில் சிலிண்டர் வாங்கி மருத்துவமனையிலிருந்த 63 குழந்தைகளைக் காப்பாற்றினார். இந்நிலையில் பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி டாக்டர் கஃபீல்கான் மீது உத்தரப்பிரதேச அரசு வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் தள்ளியது. பல்வேறு சட்டப்போராட்டத்துக்குப் பிறகு டாக்டர் கஃபீல்கான் பிணையில் வெளிய வந்தார். இதையடுத்து கஃபீல்கானின் சகோதரர் காஷிப் ஜமீல் கோரக்பூரில் அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்களால் சுடப்பட்டார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள டாக்டர் கஃபீல்கான், தனது சகோதரனுக்குச் சிகிச்சை அளிக்கவிடாமல் காவல்துறையினர் 3 மணிநேரம் காலதாமதம் செய்ததாகக் குற்றம்சாட்டினார். தனது சகோதரன் உயிர்பிழைத்துவிட்டதாகவும், இதற்கு யார் காரணம் என்றும் தெரியவில்லை என கஃபீல்கான் தெரிவித்துள்ளார். எந்தவித மிரட்டலுக்கும் நான் அஞ்சமாட்டேன் என்றும், என்னை மிரட்டி பணியவைக்கமுடியாது எனவும் கஃபீல்கான் தெரவித்துள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!