`கெஜ்ரிவால் சம்பளத்தை நிறுத்தவேண்டும்' - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அதிரடி!

சட்டசபைக்கு வராத டெல்லிமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சம்பளத்தைப் பிடித்தம் செய்யவேண்டும் என அக்கட்சி எம்.எல்.ஏ புகார் அளித்துள்ளார்.

சட்டசபைக்கு வராத டெல்லிமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சம்பளத்தைப் பிடித்தம் செய்யவேண்டும் என அக்கட்சி எம்.எல்.ஏ புகார் அளித்துள்ளார்.

கபில்மிஸ்ரா


டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் நீர்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் கபில் மிஸ்ரா. அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மிஸ்ரா தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார். அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு எதிராகப் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் சட்டப்பேரவைக்குச் சரிவர வருவதில்லை என்றும் கடந்த 2017ம் ஆண்டு 27முறை சட்டமன்றம் கூடி அதில் கெஜ்ரிவால் 7முறை மட்டுமே வந்துள்ளதாக அந்த மனுவில் கபில் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாகப் பேசிய மிஸ்ரா, முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதே இல்லை எனச் சாடினார். இது மக்களை அவமதிக்கும் செயல் என்றும், அவரது சம்பளத்தைப் பிடித்தம் செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அவரது வருகைப்பதிவை நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். அரவிந்த் கெஜ்ரிவால் ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றதாக கபில் மிஸ்ரா ஏற்கெனவே குற்றம்சாட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!