வெளியிடப்பட்ட நேரம்: 06:32 (12/06/2018)

கடைசி தொடர்பு:08:45 (12/06/2018)

`இதைச் செய்யுங்கள்; உங்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கிறோம்' - பா.ஜ.க-வைச் சீண்டும் கெஜ்ரிவால்!

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி டெல்லி சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, கெஜ்ரிவால் அரசு டெல்லி சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றியது.

தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். தனி அரசாக இருந்தாலும் யூனியன் பிரதேசங்களுக்கு, மாநிலங்களுக்கு இருக்கும் முழு அதிகாரம்  இருக்காது. காவல்துறை, வருவாய்த்துறை போன்ற முக்கிய துறைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என பா.ஜ.க தேர்தலின்போது வாக்குறுதி அளித்தது. ஆனால், தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றுபெற்று ஆட்சி அமைத்தது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த சில ஆண்டுகளாக டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிவருகிறார்.

இந்நிலையில், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “2019 தேர்தலுக்கு முன்னதாக டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கிவிட்டால், டெல்லியில் இருக்கும் அனைவரும் பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பார்கள். நாங்கள் உங்களுக்காக பிரசாரம் செய்கிறோம். ஆனால், நீங்கள் இதைச் செய்யவில்லையென்றால், பா.ஜ.க டெல்லியைவிட்டு வெளியேற வேண்டும் என மக்கள் கூறுவார்கள்” என்று கூறினார். இந்தத் தீர்மானத்தை வலியுறுத்தி, ஆம் ஆத்மி கட்சி போராட்டங்களையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க