வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (13/06/2018)

கடைசி தொடர்பு:07:24 (13/06/2018)

``மன அழுத்தம் அதிகமாக உள்ளது; நான் செல்கிறேன்”- தற்கொலை செய்துகொண்ட பையூஜி மஹாராஜ் உருக்கம்!

ஆன்மிகத் தலைவர் பையூஜி மஹாராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்!

ஆன்மிகத் தலைவர் பையூஜி மஹாராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பையூஜி

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ஆன்மிகத் தலைவர் பையூஜி மஹாராஜை ஏராளமானோர் பின்பற்றி வந்தனர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பொதுவாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அவர் பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட தலைவர்களுடன் நல்லுறவில் இருந்து வந்தவர். இந்நிலையில், அவர் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். உடனடியாக மும்பை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பையூஜி கடிதம்

அவரது மறைவுக்கு மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சௌஹான் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பையூஜி மஹாராஜ் எழுதியுள்ள கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில், ``எனக்கு மன அழுத்தம் அதிகமாக உள்ளது. நான் செல்கிறேன்; என் குடும்பத்தைக் காக்கும் பொறுப்பை யாராவது பார்த்துக்கொள்ளுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்  இறப்பு குறித்து, அவரது குடும்பத்தாரிடம்  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் பையூஜி கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.