வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (13/06/2018)

கடைசி தொடர்பு:08:12 (13/06/2018)

வாஜ்பாய் உடல்நலம் நன்றாக இருக்கிறது - எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை நன்றாக இருக்கிறதென்று, அவர் சிகிச்சை பெற்று வரும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை நன்றாக இருக்கிறதென்று, அவர் சிகிச்சை பெற்று வரும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

உடல் நல பிரச்னைகளால் நீண்டகாலமாக ஓய்வில் இருந்து வருகிறார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். கடந்த திங்கள்கிழமை அவருக்கு சிறுநீரகத் தொற்று தீவிரமானதால், டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வாஜ்பாய்

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி, வைகோ உள்ளிட்ட பல தலைவர்களும், வாஜ்பாயை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இதற்கிடையே, அவரது உடல்நலம் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ``வாஜ்பாயின் உடல்நலம் நன்றாக இருக்கிறது. ஆன்டிபயோடிக்ஸ் மருந்துகளை அவரது உடல் ஏற்றுக்கொள்கிறது. ஊசி மூலமாக அவ்வகை மருந்துகள் வாஜ்பாய்க்கு செலுத்தப்படுகின்றன. அவரை ஆய்வு செய்து பார்த்ததில், அவரது உடல்நலம் நன்றாக இருப்பது தெரியவந்தது. சிறுநீரகத் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை இன்னும் சில நாள்கள் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறுவார். அவருக்கு, எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலோரியாவின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சையளிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க