மும்பையில் 34 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து..! தீபிகா படுகோன் வீடு தப்பியது

மும்பையில் தீபிகா படுகோனேவின் வீடு அமைந்திருக்கும் 34 மாடிகள் கொண்ட குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. 

தீ விபத்து

மகாராஷ்ட்ராவின் தெற்கு மும்பை பகுதியில் 34 மாடிகள் கொண்ட குடியிருப்பு உள்ளது. அந்தக் குடியிருப்பில்தான் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் வீடும் அலுவலகமும் அமைந்துள்ளன. அந்தக் குடியிருப்பின் 33 வது தளத்தில் இன்று மதியம் 2 மணி அளவில் தீப்பற்றியுள்ளது. அந்தத் தீ இரண்டு தளங்களுக்குப் பரவியுள்ளது.

தீப்பற்றிய உடன், உடனடியாக 90 குடியிருப்பாளர்கள் அங்கீருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். 10 தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த ஒரு மாதத்தில் மும்பையில் ஏற்பட்ட மூன்றாவது பெரிய தீ விபத்து இதுவாகும். இந்த மாதத்தின் தொடக்கத்தில், தெற்கு மும்பையிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதேபோல, ஜூன் 9-ம் தேதி பட்டேல் சாம்பரில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!