`நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டிகள்' - வைரலாகும் வீடியோ!

குஜராத்தில் விபத்து ஏற்படுத்த முயன்ற காரிலிருந்து இருசக்கர வாகன ஓட்டிகள் தப்பிய காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத்தில் விபத்து ஏற்படுத்த முயன்ற காரிலிருந்து இருசக்கர வாகன ஓட்டிகள் தப்பிய காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விபத்து


குஜராத் மாநிலம் கிர்சோமனாத் பகுதியில் கார் ஒன்று அதிவேகத்துடன் சென்றுகொண்டிருந்தது. திடீரென சென்ற வேகத்திலேயே  சாலை சந்திப்பில் நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து  கண்ணிமைக்கும் நேரத்தில்  எவ்வித அறிவிப்புமின்றி மிகுந்த வேகத்துடன் மீண்டும் அந்த கார் பின்னோக்கி இயக்கப்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த மூன்று பேர் மீது  மோதும் விதமாக அவர்களுக்கு அருகே கார் சென்றது. இதனால் பதற்றமடைந்த வாகன ஓட்டி, சுதாரித்துக்கொண்டார்.  

உடனே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் வண்டியை விட்டு இறங்கினர். காரை பின்னோக்கி இயக்கி திருப்ப முயன்ற போதும் மீண்டும் அந்த இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் மீது மோத முயன்றது. இதையடுத்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமெடுத்துச்சென்றது அந்த கார். இந்தக் காட்சிகள் வெளியாகி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!