`கேரள போலீஸ் மீது நம்பிக்கை இல்லை' - நடிகை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ விசாரணை கோரும் நடிகர் திலீப்!

நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என நடிகர் திலீப் கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

டிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என நடிகர் திலீப் கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் திலீப்

தமிழ், மலையாளம் உள்ளிட்ட சினிமாக்களில் நடித்த முன்னணி நடிகை ஒருவரை காரில் கடத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவை உலுக்கியது. கேரளத்தில் நடந்த இந்த சம்பவத்தில் நடிகையின் கார் டிரைவர் மார்ட்டின் ஆண்டனி கைதுசெய்யப்பட்டார்  இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக நடிகர் திலீப் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைதுசெய்யப்பட்டார். சுமார் 80 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு நடிகர் திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு குறித்த விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இந்தநிலையில், கேரள போலீஸ் மீது தனக்கு நம்பிக்கை இல்லை எனவும்,  இந்த வழக்கு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கேரள ஐகோர்ட்டில் நடிகர் திலீப் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் திலீப்

இதுகுறித்து நடிகர் திலீப் கூறும்போது, ``இந்த வழக்கில் குற்றவாளியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டுதான் என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. கேரள போலீஸ் விசாரணை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. சி.பி.ஐ விசாரணை நடத்தினால்தான் உண்மைகள் வெளியேவரும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!