இந்தியாவுக்கு ரூ.6000 கோடியில் ஹெலிகாப்டர் விற்க அமெரிக்கா முடிவு!

ஆறு `அபாச்சி ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனைசெய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக, அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்டகன்’ கூறியுள்ளது.

ஆறு `அபாச்சி ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனைசெய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான ‘பென்டகன்’ கூறியுள்ளது.

இதுகுறித்து ‘பென்டகன்’ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``அமெரிக்க நிர்வாகம் வெளிநாட்டு ராணுவத்துக்கு விற்பனை என்ற அடிப்படையில் ரூ.6 ஆயிரம் கோடி 6 ஏஹெச்-64இ அபாச்சி ஹெலிகாப்டர்களை (6 Ah64e Apache Helicopter) இந்தியாவுக்கு விற்பனை செய்ய முடிவுசெய்திருக்கிறது.

ஹெலிகாப்டர்

இதில் ஏவுகணைகள், சென்சார்கள், ரேடார்கள் என ஏராளமான தளவாடங்களையும் சேர்த்து இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்திருக்கிறது. ‘அப்பாச்சி’ ரக ஹெலிகாப்டர்கள், அமெரிக்க ராணுவத்தாலும், சர்வதேசப் படைகளாலும் பயன்படுத்தப்படுபவை. இவற்றைப் பயன்படுத்துவதிலோ, தனது ராணுவத்தில் சேர்ப்பதிலோ இந்தியாவுக்கு எந்தக் கஷ்டமும் இருக்கப்போவதில்லை. தனது நாட்டை பாதுகாத்துக்கொள்ளவும், பிராந்திய அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும் இந்தியாவுக்கு இது வலிமையை அளிக்கும். தனது படைகளை நவீனமயமாக்குவதற்கும் இது உதவும்'' என்று கூறியிருக்கிறது.

இதுபற்றி அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ‘பென்டகன்’ தனது அறிவிக்கையை அனுப்பிவைத்துள்ளது. எந்த எம்.பி.,யும் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், இந்த விற்பனைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அடுத்த மாதம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர், அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மற்றும் ராணுவ அமைச்சருடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!