வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (14/06/2018)

கடைசி தொடர்பு:09:02 (14/06/2018)

ரம்ஜான் பண்டிகை - 24 மணி நேர சந்தைக்கு தெலுங்கானா அரசு அனுமதி

ரம்ஜான் பண்டிகையையொட்டி ஹைதராபாத்தில் 24 மணி நேரமும் கடைகளில் வியாபாரம் செய்ய தெலுங்கானா அரசு அனுமதி அளித்துள்ளது.

ரம்ஜான்

ஒரு மாதம் நோன்பிருந்து பிறை பார்த்து, இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகையான ரம்ஜான் நாளை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இதனால், சந்தைகளில் வியாபாரம் அதிகரித்துவருகின்றன. ரம்ஜான் சலுகைகள், அதிரடித் தள்ளுபடி, சிறப்புத் தள்ளுபடி என அனைத்து இடங்களிலும் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. 

ரம்ஜானுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில்,  ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில், 24 மணிநேரமும் சந்தை செயல்படுவதற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், சார்மினார் சந்தையில் நேற்று விடிய விடிய கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. 

இதுகுறித்து சந்தை வியாபாரிகள், ``24 மணிநேரம் வியாபாரம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பண்டிகைக் காலங்களில் மட்டுமே எங்களால் அதிகமாக வியாபாரம் செய்ய முடியும் ” என்றுதெரிவித்துள்ளனர்.