இரண்டு வருடங்களில் 21 நகரங்களில் நிலத்தடி நீர் தீர்ந்துவிடும்..! - நிதி ஆயோக் எச்சரிக்கை

இந்தியாவின் முக்கியமான நகரங்களில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிலத்தடி நீர் தீர்ந்துவிடும் என்று நிதி ஆயோக் நடத்திய ஆய்வு எச்சரித்துள்ளது. 

நீர்

மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரம் மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்துடன் இணைந்து நிதி ஆயோக் அமைப்பு இந்தியா முழுவதும் நீர் வளம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. தற்போது அந்த ஆய்வு முடிவுகளை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி தரும் வகையிலுள்ளது.

அந்த ஆய்வின்படி, `தற்போதைய சூழலில் 60 கோடி இந்தியர்கள் தினந்தோறும் நீர் பற்றாக்குறையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 2 லட்சம் பேர் குடிப்பதற்கு போதுமான நீர் இல்லாமல் இறந்துவருகின்றனர். இந்தியாவின் முக்கியமான 21 நகரங்களில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிலத்தடி நீர் முற்றிலுமாகத் தீர்ந்துவிடும். அதனால், 100 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவில் 70 சதவிகித நீர் மிகவும் அசுத்தகமாகவுள்ளது.

பாதுகாப்பான நீர் பட்டியலில் 122 நாடுகளில் இந்தியா 120 வது இடத்திலுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலத்தடி நீர், நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது, பாசனம் மற்றும் பண்ணை நடைமுறைகள், குடிநீர், அரசு மற்றும் திட்டங்கள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர் வளத்தைப் பாதுகாப்பதில் குஜராத், மத்தியப்பிரதேசம், ஆந்திரப் பிரதேச மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. தமிழ்நாடு ஏழாவது இடத்திலுள்ளது. நீர் மேலாண்மையில் உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்கள் மோசமான நிலையிலுள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!