`சிட்டிக்குள் ஓவர் டிராஃபிக்’ - குதிரையில் ஆபீஸுக்குச் சென்ற சாஃப்ட்வேர் இன்ஜினீயர்..! | Bengaluru techie rides horse to office on last day at work

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/06/2018)

கடைசி தொடர்பு:21:34 (16/06/2018)

`சிட்டிக்குள் ஓவர் டிராஃபிக்’ - குதிரையில் ஆபீஸுக்குச் சென்ற சாஃப்ட்வேர் இன்ஜினீயர்..!

போக்குவரத்து நெரிசலால், வாகனத்துக்குப் பதிலாகக் குதிரையில் ஆபீஸுக்கு வந்த இளைஞரின் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. 

குதிரை

பெங்களூருவில் உள்ள சாஃப்ட்வேர் கம்பெனியில் கம்ப்யூட்டர் இன்ஜினீயராகப் பணியாற்றிவருபவர், ரூபேஷ்குமார். இவர், தினமும் தனது வாகனத்தில் அலுவலகத்துக்கு வந்துசென்றார். ஆனால், பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலால் தினமும் அலுவலகத்துக்கு வந்துபோவதில் ரூபேஷுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது வேலையை உதறித்தள்ளிவிட்டு, சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்க முடிவெடுத்து வேலையை ராஜினாமா செய்துள்ளார். நேற்று கடைசி நாள் அலுவலகத்துக்குக் கிளம்பிய அவர், பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக  `last working day as a software engineer' என்ற பலகையை மாட்டிக்கொண்டு குதிரையில் அமர்ந்து அலுவலகம் சென்றுள்ளார். 

 ரூபேஷ்குமார் குதிரையில் ஆபீஸ் செல்வதைப் பார்த்த பலரும் அதைப் படம் பிடித்து சோஷியல் மீடியாக்களில் உலவ விட்டனர். இது, சிறிது நேரத்திலேயே வைரலாகப் பரவியது. இதுகுறித்து அவர்,  ``பெங்களூருவில் கடந்த 8 ஆண்டுகளாக வேலைபார்த்துவருகிறேன். இங்கு, போக்குவரத்து நெரிசல் அதிகம். இதனால், காற்று முற்றிலுமாக மாசடைந்து சுவாசிக்க ஏற்றதாக இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே, குதிரையில் அலுவலகம் வந்தேன். இதற்காக, முறையாகக் குதிரை ஏற்றம் கற்றுக்கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க