ஒழுகிய பேருந்து... டிரைவருக்கு குடைபிடித்து உதவிய நடத்துநர்...!

மழையின் காரணமாக பேருந்து ஒழுகியதால் டிரைவருக்கு குடைபிடித்து நடத்துநர் உதவியுள்ளார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. 

பேருந்து

தென்மேற்கு பருவமழையின் காரணமாகக் கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டங்கள் உயர்ந்து வருகின்றன. மேலும் மழையின் காரணமாக மாநிலத்தின் பல்வேறு நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆங்காங்கே சாலைகள் பாதிப்படைந்துள்ளது. இதற்கிடையே, அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரியில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி நீர் தமிழகம் வந்தடைந்துள்ளது. இந்நிலையில், மழையின் காரணமாக பேருந்து ஒழுகியதால் டிரைவருக்கு குடைபிடித்து நடத்துநர் உதவியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து அரசுப்பேருந்து ஒன்று நேற்று புறப்பட்டுச் சென்றது. அப்போது, கனமழை பெய்ததால் பேருந்து முழுவதும் ஒழுக ஆரம்பித்தது. இதில் பயணிகள் அவதிப்பட்டனர். இதற்கிடையே, கனமழையால் டிரைவரால் பேருந்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நடத்துநர் குடைபிடிக்க டிரைவர் பாதுகாப்பாக பேருந்தை இயக்கினார். இதை அங்கிருந்தவர்கள்  வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாக்களில் பகிர அது வைரலாகியுள்ளது. பலரும் பேருந்தின் அவலநிலை குறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!