`அனுஷ்காவை போல் தட்டிக்கேளுங்கள்' - ரோட்டில் குப்பை வீசியவருக்கு எதிராகக் கொந்தளித்த விராட் கோலி!

நடுரோட்டில் பிளாஸ்டிக் குப்பையை வீசியவரை விராட் கோலி மனைவி அனுஷ்கா ஷர்மா தட்டிக்கேட்ட வீடியோ வைராலகி வருகிறது. 

விராட் கோலி  - அனுஷ்கா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா காரில் சென்றுகொண்டிருந்தபோது, அதேவழியில் மற்றொரு காரில் வந்த ஒருவர் பிளாஸ்டிக் குப்பையை சாலையில் வீசியுள்ளார். இதைப்பார்த்த அனுஷ்கா அந்த நபரிடம்,   ``ஏன் பிளாஸ்டிக் குப்பையை சாலையில் போடுகிறீர்கள். குப்பைகளைச் சாலைகளில் வீச வேண்டாம். குப்பைத் தொட்டிகளை பயன்படுத்துங்கள்" என அறிவுரை வழங்கினார். இந்த வீடியோவை கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பகிர்ந்து,   ``இதுபோன்று சிலர் சாலையில் குப்பைகளை வீசிவிட்டுப் போகிறார்கள். ஆடம்பர கார்களில் சென்றால் மூளைகளை இழந்துவிடுகிறார்கள்.  இவர்களா நம் நாட்டைச் சுத்தமாக வைக்கப் போகிறார்கள்? இதேபோல் எங்காவது நடந்தால் அனுஷ்காவை போல் தட்டிகேளுங்கள். அவர்களை நல்வழிப்படுத்த விழிப்புணர்வு செய்யுங்கள்" எனப் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

கோலி வெளியிட்ட இந்த வீடியோவுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்கள் தெரிவிக்க, மற்றொரு தரப்பினரோ விளம்பரத்துக்காக அனுஷ்கா வீடியோவை வெளியிட்டுள்ளார் எனக் கூறி மீம்ஸ் போட்டுள்ளனர். இதனைப் பார்த்து கடுப்பான கோலி,   ``தைரியமாக இதுபோன்று தட்டிக்கேட்காதவர்கள் தான் இதனைக் கிண்டலடிக்கிறார்கள். இக்காலத்தில் அனைத்து மீம்ஸ்களாக பார்க்கப்படுகிறது வெட்கக்கேடானது" எனக் காட்டமாக கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!