`பீரை விட குடிக்கும் நீர் முக்கியம்' - புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அறிவுரை..! | Drinking water is more important than beer says Puducherry Governor Kiranbedi

வெளியிடப்பட்ட நேரம்: 15:14 (17/06/2018)

கடைசி தொடர்பு:15:14 (17/06/2018)

`பீரை விட குடிக்கும் நீர் முக்கியம்' - புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அறிவுரை..!

“பீரை விடக் குடிக்கும் நீர் முக்கியம்” எனப் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

கிரண்பேடி

புதுச்சேரி அருகே அய்யங்குட்டிபாளையம் பகுதியில் இயங்கிவரும் தனியார் மதுபான ஆலையில் முறைகேடாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக ஆளுநர் மாளிகைக்குப் தொடர் புகார்கள் வந்து கொண்டிருந்தது. அதையடுத்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சுற்றுச்சூழல் துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை என சுமார் 30-க்கும் மேற்பட்ட துறை அதிகாரிகளுடன் அரசு பேருந்தில் சென்று சம்மந்தப்பட்ட தொழிற்சாலையில் அதிரடி ஆய்வை மேற்கொண்டார். அப்போது தொழிற்சாலையில் நிலத்தடி நீர் எடுக்கும் பகுதிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ”நீரை முறையாகப் பயன்படுத்துவது குறித்தும், கழிவுநீரை முறையாகப் சுத்திகரிப்பு செய்வது குறித்தும் இந்தத் தொழிற்சாலைக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறேன். குடிநீர் என்பது ஏழை மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளில் ஒன்று. ஆனால் பீர் என்பது ஆடம்பர வாழ்க்கைக்கு உண்டான மது வகை. அதனால் பீரைவிட குடிநீர்தான் முக்கியம். புதுச்சேரியின் நிலத்தடி நீரைப் பாதுகாக்க இதுபோன்ற ஆய்வுகள் இனி தொடரும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close