வெளியிடப்பட்ட நேரம்: 07:03 (18/06/2018)

கடைசி தொடர்பு:07:17 (18/06/2018)

விளையாட்டுத் துப்பாக்கி என்று நினைத்து தாயை தவறுதலாக சுட்ட சிறுமி..!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிறுமி, விளையாட்டுத் துப்பாக்கி என்று நினைத்து நிஜத் துப்பாக்கியைக் கொண்டு அவரின் அம்மாவை சுட்டு விட்டது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

துப்பாக்கிச் சூடு

கோப்புப்படம்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த காகோலி ஜனா. அவர், நேற்று காலையில் தோட்டத்திலிருந்து ஒரு துப்பாக்கியைக் கண்டெடுத்துள்ளார். அந்தத் துப்பாக்கியை விளையாட்டுத் துப்பாக்கியை என்று நினைத்து அதைக் கையில் வைத்துக்கொண்டு விளையாடியுள்ளார். ஆனால், அது எதிர்பாராமல் வெடித்துள்ளது. அதில், அந்தச் சிறுமியின் தாய் மீது குண்டு பாய்ந்துள்ளது. படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, துப்பாக்கி அந்தச் சிறுமிக்கு எப்படி கிடைத்தது என்ற கோணத்தில் அந்தச் சிறுமியிடம் காவல்துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர்.