வாட்ஸ்அப் குரூப் மூலம் நகரைத் தூய்மை செய்யும் சிறுவர்கள்

கர்நாடகா மாநிலம் கலபுராகி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தங்களின் செயல் மூலம் சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகின்றனர்.

சிறுவர்கள்

கர்நாடகா மாநிலம் கலபுராகி மாவட்டத்தைச் சேர்ந்த 32 மாணவர்கள் ஒரு குழுவாக இணைந்து வாரம் ஒருமுறை 3 முதல் 4 மணிநேரம் தங்கள் பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றி, சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.


 

மேலும், இந்தச் சிறுவர்கள் பிளாஸ்டிக் குறித்த விழிப்பு உணர்வையும் ஏற்படுத்திவருகின்றனர். இவர்கள் வாட்ஸ் அப் குரூப் ஒன்றைத் தொடங்கி அதில் தாங்கள் ஒன்றுகூட வேண்டிய இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை முடிவு செய்து ஒவ்வொரு வாரமும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிறுவர்களின் செயல் அம்மாநிலத்தில் பெரும் பேசு பொருளாகமாறியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!