வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (18/06/2018)

கடைசி தொடர்பு:18:53 (18/06/2018)

மலைப்பாம்பிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய வனத்துறை அதிகாரி - வைரல் வீடியோ

மேற்கு வங்கம் மாநிலத்தில் மலைப்பாம்புடன் செல்ஃபி எடுக்க முயன்ற வனத்துறை அதிகாரி நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

பாம்பு

வைரல் வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்

மேற்கு வங்க மாநிலம் பைக்குந்தாபூர் என்ற வனப்பகுதிக்கு அருகில் உள்ள ஜால்பைகுரி என்ற கிராமத்தில் ஒரு மலைப்பாம்பு புகுந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் பாம்பை பத்திரமாக மீட்டனர். பின்னர், மீட்ட பாம்புடன் செல்ஃபி எடுக்க அங்கு ஒரு கூட்டமே திரண்டது. தன் தோளில் பாம்பை சுமந்துகொண்டு வனத்துறை அதிகாரி சஞ்சய் தத்தா போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது தன் கழுத்தை இறுக்கிய பாம்பிடமிருந்து உயிர் தப்பிய அதிகாரியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

வீடியோ தொடங்கும் முன் சஞ்சய் தன் தோளில் பாம்பை வைத்துக்கொண்டு கம்பீரமாகப் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார். கூட்டம் அதிகமான பிறகு அசாதாரணமாக நின்றுகொண்டிருந்த அவரின் பிடியில் இருந்து பாம்பு நழுவத் தொடங்குகிறது. அதைச் சுதாரித்துக்கொண்ட சஞ்சய், மக்கள் கூட்டத்திலிருந்து வெளியேறத் தொடங்குகிறார். அப்போது பாம்பு அவரின் கழுத்தை இறுக்க முயற்சி செய்து முற்றிலும் நெருங்கிச் சென்றுவிடுகிறது. பிறகு அருகில் இருந்த ஒருவர் அதிகாரியின் கழுத்தில் சுற்றிய பாம்பைப் பிடித்துக்கொண்டு செல்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.